search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய மாணவர்"

    ஆஸ்திரேலியாவில் படிப்பதற்காக சென்ற மவுலின் ரதோட் என்ற மாணவர், டேட்டிங் ஆப் மூலம் கிடைத்த தோழியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Australia
    கான்பெரா:

    சமூக வலைதளங்களின் ஆதிக்கம் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. நன்மைகள் மட்டுமன்றி தீமைகளும் அதிக அளவில் சமூக வலைதளங்கள் மூலம் நிகழ்கிறது. இதனை கட்டுப்படுத்த இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் அவற்றில் கிடைக்கும் நண்பர்கள் குறித்து விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. விழிப்புணர்வு இல்லாமல், பாதுகாப்பற்ற செயலியால் ஏற்பட்ட நட்பு, இந்திய மாணவர் ஒருவரை பலி வாங்கி உள்ளது.

    மவுலின் ரதோட் என்ற இந்திய மாணவர் படிப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் சமீபத்தில் டேட்டிங் ஆப் மூலம் கிடைத்த பெண் தோழி ஜாமீ லீ என்பவரை சந்திக்க முதன்முறையாக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.



    அப்போது சிறிதும் எதிர்பார்க்காமல், ஜாமீ லீ, மவுலின் ரதோட்டை மிக மோசமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயங்களுடன் ரதோட் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரை தாக்கிய குற்றத்துக்காக ஜாமீ கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ரதோட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் அந்த பெண் மீது கொலை வழக்கு பதியப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

    கல்வியில் முன்னேறுவதற்காக ஆஸ்திரேலியா சென்று, தனது உயிரை விட்ட ரதோட்டை எண்ணி அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். #Australia
    ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இளம்பெண்ணை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். #IndianStudentKilled #Australia
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகே வசித்து வந்தவர் மவுலின் ரதோட் (வயது 25). இந்திய மாணவரான இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்று, அங்குள்ள கல்லூரி ஒன்றில் கணக்கியல் துறையில் பயின்று வந்தார். இவருக்கும், மேற்கு மெல்போர்னின் புறநகர் பகுதியான சன்பரியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தனியாக வசித்து வரும் அந்த இளம்பெண்ணை பார்ப்பதற்காக மவுலின் ரதோட் கடந்த 23-ந் தேதி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் அங்கே படுகாயமடைந்து கிடந்த மவுலின் ரதோடை சிலர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மவுலின் ரதோட் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக அந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கொல்லப்பட்ட மவுலின் ரதோட், தனது பெற்றோருக்கு ஒரே மகன் என அவரது நண்பர் கூறியுள்ளார். இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.   #IndianStudentKilled #Australia  #Tamilnews 
    அமெரிக்காவில் 2014ம் ஆண்டு இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கிய வழக்கில் அமெரிக்கர் குற்றவாளி என என கோர்ட்டு அறிவித்தது
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் பிரவிண் வர்க்கீஸ். இந்திய வம்சாவளி மாணவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாயம் ஆனார். 5 நாட்களுக்கு பின்னர் அவர் விபத்தில் மரணம் அடைந்து விட்டதாக கார்பன்டேல் பகுதி போலீசார் அறிவித்தனர்.

    19 வயதான பிரவிண் மரணம், விபத்தினால் நிகழ்ந்தது அல்ல என்று அவரது குடும்பத்தினர் கருதினர். அவர்கள் தனிப்பட்ட முறையில் டாக்டர்களை கொண்டு நடத்திய பிரேத பரிசோதனையின் முடிவு, கார்பன்டேல் பகுதி போலீசார் ஏற்பாட்டில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து முரண்பட்டது.

    இதையடுத்து வர்க்கீஸ் குடும்பத்தினர், கார்பன்டேல் பகுதி போலீஸ் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அதன்பின்னர் இந்த வழக்கில் 19 வயதான கயேஜ் பெதுனே என்ற அமெரிக்கர் சிக்கினார்.

    இல்லினாய்சை சேர்ந்த இவர், பிரவிண் வர்க்கீசை சம்பவத்தன்று (2014-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி) இரவு ஒரு வாகனத்தில் அழைத்து சென்று உள்ளார். அப்போது கொகைன் போதைப்பொருள் வாங்க பிரவிண் வர்க்கீஸ் விரும்பி உள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டு உள்ளது. அதில் பிரவீண் வர்க்கீசை பெதுனே சரமாரியாக தாக்கி உள்ளார். அதில் அவர் உயிரிழந்தார்.

    இப்போது பெதுனே மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவர் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப் படலாம்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது மகன்சாவில் நீதி கிடைத்து உள்ளதில் பிரவிண் வர்க்கீசின் தாயார் லவ்லி வர்க்கீஸ் நிம்மதி அடைந்து உள்ளார். 
    ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைப்பகுதியின் ஆபத்தான இடத்தில் செல்பி எடுக்க முயன்ற இந்திய மாணவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். #selfiekills
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் படித்து வரும் இந்திய மாணவர் அங்கித் என்பவர் அவரது நண்பர்களுடன் அல்பானி அருகில் உள்ள புகழ்பெற்ற கோட்டைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, தனது செல்பி மோகத்தால் கோட்டையின் அருகில் உள்ள ஆபத்தான மலைப் பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார்.



    அப்போது கால் தவறி விழுந்த மாணவர், கடலில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஹெலிகாப்டர் உதவியுடன் மாணவனின் உடலை மீட்டதாகவும், சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்க இந்தியாவில் உள்ள மாணவரின் பெற்றோரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.



    பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2 வருடங்களாக இந்த பகுதி மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. #selfiekills
    ×